குழந்தை பாதுகாப்பு

>> Wednesday, November 4, 2009

குழந்தையை தூக்கிப்போட்டு கொஞ்சுவது, குலுக்கி , குலுக்கி சந்தோஷப்படுவது எல்லாம் எவ்வளவு தவறானது என்பது பல பெற்றோருக்கும், அவர்களை சார்ந்த உறவினர், நண்பர்களுக்கும் தெரிவதில்லை.

பச்சிளம் குழந்தைக்கு, சிகரெட் நாற்றத்துடன் உதட்டோடு கன்னம் பதித்து முத்தமிடுவது, சுத்தமில்லாமல் குழந்தையை தூக்கிக் கொஞ்சுவது போன்றவை எல்லாம் அதற்கு வியாதியை வரவழைப்பது என்பது கூட பலருக்கும் தெரிவதில்லை.

அதிலும், பிறந்து சில மாதமே ஆன குழந் தையை தூக்கிப்போட்டு பிடிப்பது என்பது கொடூரமான கொஞ்சல். இப்படி செய்யும் போது,சில குழந்தைகள் தரையில் விழுந்து தலையில் அடிபடுவதும் உண்டு. அப்படி அடிபடும் போது, தலையில் ரத்த காயத்துக்கு சிகிச்சை செய்துவிட்டு விட்டுவிடுவதுண்டு. ஆனால், சில ஆண்டுகளில் மூளையில் அந்த குழந்தைக்கு எந்த அளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை பெற்றோர் உணருவதே இல்லை. அப்போது தலையில் கிரிக்கெட் பந்து பட்டோ, பைக் மோதியோ தான் தலையில் அடிபட்டது என்று நம்புகின்றனர். ஆனால்,பல ஆண்டுக்கு முன், குழந்தையை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடிய போது, அது தவறி விழுந்தது என்பதையோ, அதனால் தான் இப்போது விபரீத பாதிப்பு ஏற்பட்டது என்பதையோ நம்ப அவர்கள் தயாரில்லை.

ஆனால், உண்மை அது தான். இப்படி அரிதாக சில குழந்தைகள் நிரந்தர மூளை பாதிப்புடன் இருக்கின்றன. வெளியில் தெரிவது சில மட்டுமே. இதுபோல, குழந்தையை தூக்கிப் போட்டு குலுக்குவதால் பெரும் ஆபத்து பின்னாளில் காத்திருக்கிறது என்பதையும் பெற்றோர் உணருவதில்லை. பிஞ்சு குழந்தையை தூக்கிப் போட்டுக்குலுக்குவதால் அதன்பின் தலையில் பலத்த சேதம் ஏற்படுகிது; மூளையில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. அதனால், மூளையில் செல்களும் பாதிக்கப்பட்டு, பத்து, பதினைந்து ஆண்டுகளில் பேச முடியாமல் போவதும், சாப்பிட முடியாமல் போவதும் கூட நடப்பதுண்டு.

அமெரிக்காவில் , ஆண்டுக்கு இப்படி பாதிக் கப்பட்ட 1,200 குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றன. சிறிய வயதில் குஷிக்காக தூக்கிப் போட்டு பிடித்து , குலுக்கப்பட்ட குழந்தைகள் தான் இவை. இந்த பாதிப்புக்கு “ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்’ என்று பெயர். மூளையில் பல வித பாதிப்புகளை இது ஏற்படுத்தும்.

இந்த பாதிப்பு வராமல் இருக்க டாக்டர்கள் கூறும் அட்வைஸ் என்ன தெரியுமா? “குழந்தை அழுகிறது என்று அதை சமாதானப்படுத்தவோ, குஷிக்காகவோ,அதை தூக்கிப் போட்டு பிடித்து விளையாடவோக்கூடாது. அது தான் விபரீதத்தின் ஆரம்பம்!

0 comments:

Post a Comment

.

தமிழகச் செய்திகள்

நாடும் நடப்பும்

Oneindia Tamil

AL JAZEERA ENGLISH

Oneindia Videos

தேசியச் செய்திகள்

சு‌ற்று‌ச்சூழ‌ல்

Google செய்திகள்

AL JAZEERA (MIDDLE EAST)

உலகச் செய்திகள்

நே‌ர்முக‌ம்

Google News

AL JAZEERA (ASIA-PACIFIC)

Oneindia News

  © Blogger template VINAI SEI by RiazPlil 2009

Back to TOP