லவ் ஜிகாத்' பற்றி ஆதாரம்? நீதிமன்றத்தில் கேரள டிஜிபி அறிக்கை

>> Thursday, November 12, 2009

!


முஸ்லிம் அல்லாத இளம் பெண்களை முஸ்லிம் இளைஞர்களின் காதல் வலையில் சிக்கவைத்து பின்னர் அவர்களை இஸ்லாமுக்கு மாற்றும் "லவ் ஜிகாத்' முயற்சி பற்றி தெளிவான ஆதாரம் கிடைக்கவில்லை என்று கேரள உயர் நீதிமன்றத்தில் மாநில காவல் துறை புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


காவல்துறை தலைவர் ஜேகப் புன்னோஸ் இந்த அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: லவ் ஜிகாத் பற்றி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் அனுப்பியுள்ள அறிக்கைகளில் தரப்பட்டுள்ள தகவல்கள் முரணாக உள்ளன. அதனால் இது பற்றி திட்டவட்ட முடிவுக்கு வர முடியவில்லை.


ஆயினும், மோசடி வேலைகள் மூலம் மத மாற்றம் செய்ய சில குழுக்கள் மறைமுகமாக ஈடுபடுவது பற்றி சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் கொடுத்துள்ள அறிக்கைகளில் 3 பேரின் அறிக்கைக்கு ஆதாரம் இல்லை. செவிவழி செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தரப்பட்டுள்ளது.

எனவே கட்டாய மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சந்தேகமற அறிக்கை தர இந்த 3 அறிக்கைகளும் உதவவில்லை. இந்த 3 அறிக்கைகளில் உள்ள தகவல்கள் குறித்து இன்னும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றார் புன்னோஸ்.


மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தாக்கல் செய்திருந்த 18 அறிக்கைகளையும் அக்டோபர் 26-ம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப சீலிட்ட உறையிலிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் டிஜிபி புன்னோஸ்.


இந்த பிரச்னை தொடர்பாக அக்டோபர் 22ம் தேதி டிஜிபி தாக்கல் செய்த அறிக்கை குறித்து நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் முஸ்லிம் அல்லாத பெண்களை முஸ்லிம் இளைஞர்களின் காதல்வலையில் சிக்கவைத்து முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் முயற்சிகள் ஆங்காங்கே நடப்பதாகவும் ஆயினும் லவ் ஜிகாத் பற்றி தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.



இந்த அறிக்கையில் உள்ள விஷயங்கள் மழுப்பலாக உள்ளதாக உயர்நீதிமன்றம் குறை கூறியிருந்தது. மேலும் லவ் ஜிகாத் தொடர்பாக தாக்கல் செய்த அறிக்கைக்கு அடிப்படையாக அமைந்த அறிக்கைகளை சீலிட்ட உறைக்குள் வைத்து நவம்பர் 11ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டிருந்தது.




இதே 'லவ் ஜிகாத்' பிரச்னை கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் எழுப்பப்பட்டது. இந்த பிரச்னை பற்றி கூட்டாக விசாரித்து நவம்பர் 13-க்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கர்நாடகம், கேரள காவல்துறைக்கு அக்டோபர் 26-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


நன்றி:http://www.dinamani.com/edition/story.aspx?Title=லவ்+ஜிகாத்++பற்றி+ஆதாரம்+இல்லை:+நீதிமன்றத்தில்+கேரள+டிஜிபி+அறிக்கை&artid=153295&SectionID=130&MainSectionID=130&SEO=&SectionName=India

0 comments:

Post a Comment

.

தமிழகச் செய்திகள்

நாடும் நடப்பும்

Oneindia Tamil

AL JAZEERA ENGLISH

Oneindia Videos

தேசியச் செய்திகள்

சு‌ற்று‌ச்சூழ‌ல்

Google செய்திகள்

AL JAZEERA (MIDDLE EAST)

உலகச் செய்திகள்

நே‌ர்முக‌ம்

Google News

AL JAZEERA (ASIA-PACIFIC)

Oneindia News

  © Blogger template VINAI SEI by RiazPlil 2009

Back to TOP